search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரர் படிப்பு செலவு"

    கோவை மாணவி சிவரஞ்சனி தொடர்ந்து கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் பள்ளியில் படிப்பதற்கும் ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகள் சிவரஞ்சனி. தனது தாய், தந்தை மறைவுக்குப் பிறகு, தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்த்தை தொடர்ந்து படிக்க வைப்பதற்காக, கோவை அரசு கலைக்கல்லூரியில் தான் படித்து வந்த பி.ஏ. படிப்பினை நிறுத்தி விட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதாகவும், தனக்கு அரசு வேலையோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கு உதவியோ தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று ஊடகத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.




    சிவரஞ்சனியின் பேட்டியை தொலைகாட்சியில் 21-ந்தேதி அன்று காலை நான் பார்த்தேன். ஏழை எளிய மக்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அம்மாவின் வழியில் செயல்படும் அரசு, சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். இதற்கான உத்தரவை நான் பிறப்பித்துள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami


    ×